2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2 ஆயிரத்து 505.3 பில்லியன் ரூபாயாகக் காணப்படுகின்றது.
அதில் ஆயிரத்து 776 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையினை அரசாங்கம் புனரமைப்புக்காக செலவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான செலவீனமான 2 ஆயிரத்து 538 பில்லியன் ரூபாயை விட எதிர்வரும் வருடத்தின் செலவீனமானது 33 பில்லியன் ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுச் சேவைகளுக்காக 12.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
அதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை காரியாலயங்கள், நீதிமன்றம், நாடாளுமன்றம், ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.