வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலம் பெயர் வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும்.
அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 நபர்களைக் கொண்டு இந்த வாரியம் ஏற்படுத்தப்படும். 5 கோடி புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு வாரியம் உருவாக்கப்படும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊர் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் எனது கிராமம் திட்டம் உருவாக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.