காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா்.
புதுவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக இலங்கையில் இருந்து அமைச்சா்களும் தூதுவா்களும் ஏற்கெனவே புதுவைக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா் என அவர் தெரிவித்தார்.
பன்னெடுங்காலத்துக்கு முன்பு காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைமுறையில் இருந்து, பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அதை மீண்டும் செயற்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன், கப்பல் போக்குவரத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.