தர்கா நகரில் கலவரத்தை ஏற்படுத்தியது போன்று மீண்டும் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிடவேண்டாம் என ஞானசார தேரரிடம் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஈஸ்ட்ர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம் பாதிகப்பட்டவர்களுக்கு இதுவரை நீதியை பெற்றுக்கொடுக்க தவறியுள்ளதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.
தற்போது மக்கள் அரசாங்கத்தை பார்த்து கேள்விகேட்கும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைக்க மீண்டுமொரு தாக்குதல் குறித்து பேசுவதாக தெரிவித்தார்.
எனவே மக்கள் மத்தியில் அச்சம், பயத்தை ஏற்படுத்தி நாட்டை அழித்துவிட வேண்டாம் என ஞானசார தேரரிடம் கேட்டுகொள்வதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இதேவேளை பைத்தயக்காரர் போன்று புலம்பும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஞானசார தேரர் பயணிக்கும் பாதையில் செல்வதாகவும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.