யாழ்ப்பாணம்- சங்கானை பகுதியில் காணாமல்போன சிறுவன், வெள்ள வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கானை ஸ்தான அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் நிரோஜன் ஸ்டீபன் (வயது 6) என்ற சிறுவனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன், நேற்றைய தினம் (சனிக்கிழமை) மதியம் முதல் காணாமல் போயுள்ளார். இதனால் அவரை, குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் பல மணி நேரமாக அப்பகுதிகளில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில், அப்பகுதியிலுள்ள வெள்ள வாய்க்காலில், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.