நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு பற்றிய மாநில அரசுகளின் அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கோல் இந்தியாவிடம் சுமார் 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டு மின் உற்பத்தி 24 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மகாராஷ்டிரா அரசு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மகாராஷ்டிராவில் 13 அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.