ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் முக்கியப் பங்குகள் 100 சதவீதமும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதர சொத்துக்கள் குறித்து தீர்மானிக்க Air India asset holding company Ltd என்ற நிறுவனத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
அதன் மூலம் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான கட்டடங்கள், நிலம் போன்றவற்றை விற்பனை செய்து, கிடைக்கும் தொகையை பயன்டுத்தி கடன்களை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.