ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்றும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லையென்றும் 21ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைத்தால் ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.