கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.
சினோபோர்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பைசர் அல்லது மடர்னா போன்ற தடுப்பூசிகளில் இருந்து மூன்றாவது டோஸ் வழங்குமாறு நிபுணர் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
சினோபோர்ம் மற்றும் சினோவக் தடுப்பூசிகள் செயலற்ற வைரஸால் தயாரிக்கப்படுகின்ற அதே நேரத்தில் பைசர் மற்றும் மடர்னா தடுப்பூசிகள் வைரஸின் குரோமோசோம் மாதிரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ. போன்ற ஒரு குரோமோசோம் தடுப்பூசியை, செயலற்ற வைரஸால் தயாரிக்கப்படும் தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், குறைபாடுள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளது.
தடுப்பூசி போட்டாலும் கூட, டெல்டா மாறுபாடு போன்ற வகைகளின் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.