பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டவரப்பட்டுள்ளன.
ஏற்கனவே 26 ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், டசால்ட் நிறுவனம் மேலும் மூன்று விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த விமானங்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேலும் 6 விமானங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பிரச்சினை, பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் கூடிய பலம் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















