தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாயினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 225 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் புதிய விலை 470 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் புதிய விலை 1170 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.