சாய்ந்தமருது 03ஆம் பிரிவில் உள்ள பிரதேசங்களில் புகுந்த யானையால் அங்கு பயிர்நிலங்கள், பயிர்கள், மரங்கள் முற்றாக சேதமாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் யானைகள் ஊடுருவுவதால் மக்கள் பாதிக்கப்படுவதுடன் உடமைகளும் சேதமாக்கப்படுவது தொடர்கதையாகிறது.
இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்றதாகவும். சாய்ந்தமருதில் சுற்றுமதில்களை அடித்து நொறுக்கியிருப்பதாகவும் இந்த யானை அரிசி ஆலையொன்றினுள் புகுந்து அங்கிருந்த நெல் மூட்டைகளையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளதாவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையினால் பாரியளவு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு, இரவு வேளையில் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் குறித்த மக்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலை யிட்டு உடனடி தீர்வினை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.