கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு அவுஸ்ரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மோரிசன், 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வதை உறுதிசெய்துள்ளார்.
உலகளாவிய தலைவர்கள் அடுத்த மாதம் கிளாஸ்கோவில் கூடி, அதிகரித்து வரும் உலக வெப்பநிலையை தடுப்பதற்கான புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
நிலக்கரி மற்றும் எரிவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்யும் அவுஸ்ரேலியா, வலுவான காலநிலை நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய அழுத்தத்தில் உள்ளது.
இதனிடையே பிரதமர் ஸ்கொட் மோரிசன், கடந்த மாதம் கூட்டத்தை தவிர்க்கலாம் என கூறிய போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.
இதனைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வதை உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் நான் கலந்துகொண்டதை உறுதிசெய்தேன். அதில் நான் கலந்து கொள்ள காத்திருக்கிறேன். இது ஒரு முக்கியமான நிகழ்வு’ என கூறினார்.