இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 34 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 1 இலட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 199 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 52 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.