சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார்.
இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவித்தல், எரிசக்தித் துறையில் தற்சார்பு, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம், நச்சுப்புகை வெளியேற்றக் குறைப்பு போன்றவற்றின் மூலம் தூய்மையான மற்றும் செயல்திறன் மிக்க எரிசக்தி வளங்களைக் கண்டறிதல், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம், உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குதல் போன்றவை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழும் பெருநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இதில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.