தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேர் தேர்தல் அலுவலர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளைய தினம் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று பதிவியேற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே மறைமுக தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.