ஆப்கானிஸ்தானின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நீடித்த அமைதிக்கு பாலின சமத்துவம் முக்கியம் என காபூலில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் விவகாரம் தொடர்பான பிரதிநிதி அலிசன் டேவிடியன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களைத் தவிர ஏனைய பெண்கள் வேலைக்கு செல்ல முடியத நிலை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு மேல்நிலை, உயர்நிலைப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்கள் அரசாங்கத்தில் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அதேநேரம் பெண்களுக்கான அமைச்சுக்கள் உட்பட அனைத்தும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
சில மாகாணங்களில் பெண்கள் வேலை செய்வதற்கும் வீடுகளை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படாத நிலையில் பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் ஐ.நா மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை சமாளிக்க ஒரே வழி சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களின் முழு பங்களிப்பு அவசியம் என அலிசன் டேவிடியன் தெரிவித்துள்ளார்.