அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருகின்ற நிலையில், தரம் உயர்த்தப்பட்ட எல் 70 ரக போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை இந்தியாவும் வைத்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த எல்லைப் பகுதியில் ஏற்கனவே எம் -777 என்ற பீரங்கிகள், ஸ்வீடனின் எல் 70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்தியா நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து இராணுவத்தின் விமான பாதுகாப்பு பிரவு அதிகாரி சர்யா அப்பாசி கூறுகையில், ‘ அருணாசல பிரதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உயர் மலை பகுதிகளில் இந்தத் தரம் உயர்த்தப்பட்ட எல்70 போர் விமான எதிர்ப்பு பீரங்கிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஏவுகணை எதிரி நாட்டு ஆளில்லா கண்காணிப்பு மற்றும் போர் விமானங்கள் இராணுவ ஹெலிகொப்டர்கள், நவீன பேர் விமானங்களை அழிக்கும் திறன் கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.