உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை லான்செட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”உயர் வெப்பத்தால் ஏற்கனவே பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதோடு, உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு இல்லாத நிலையை சமூகம் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
உயர் வெப்பம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் 3 இலட்சத்து 45 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அதேவேளை உயர் வெப்பநிலை நேரடி உடல் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மக்களின் பணித் திறனையும் பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.