இந்தியாவில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ள வருமாறு சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச எண்ணெய், எரிவாயுத் துறை நிபுணர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவை தற்சார்பு நிலையை அடைய வைக்கும் நோக்கில் இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் மேம்பாட்டில் இந்தியாவுடன் கூட்டுறவு வைக்க சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என பிரதமர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.