ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 43ஆயிரத்து 39பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 17ஆயிரத்து 158பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 414பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 85ஆயிரத்து 32பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 799பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 75ஆயிரத்து 351பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.