பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 28ஆயிரத்து 711பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 85இலட்சத்து 89ஆயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 031பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 49ஆயிரத்து 139பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 179பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 21ஆயிரத்து 995பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 850பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.