இலங்கையில் 87 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இருபது வயதைக் கடந்த சகலருக்கும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் 70 சதவீதமானவர்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சமூகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.