அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி, சுமார் 413 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர்ந்து துரிதப்படுத்தி வருகின்ற நிலையில் கிட்டத்தட்ட 13 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இருமுறை போடப்படும் மொடெர்னா, பைசர் தடுப்பூசிகளும் ஒருமுறை போடப்படும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசியும் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.
சுமார் 220 மில்லியன் பேர் முதல் டோஸையும் சுமார் 190 மில்லியன் பேர் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.