மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதும் தற்போது வரவில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும்போது கட்டுப்பாடுகளை முன்கூட்டியே செயற்படுத்துவது சிறந்தது என ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டும் அங்கு புதிதாக 52,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இருப்பினும் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமில்லை என பிரதமர் கூறியுள்ளார்.
கோடைக்காலத்தில் பிரித்தானியாவின் கொரோனா கட்டுப்பாடுகளைப் பிரதமர் ஜோன்சன் தளர்த்தினார்.
மேலும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம், தடுப்பூசி நிலையங்கள் ஆகியவற்றின் மூலம், முழு நம்பிக்கையுடன், தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.