இந்திய அதானி குழுமத்தின் தலைவர் கௌவுதம் அதானி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோளிட்டு இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒரு மாதத்திற்கு முன்னர் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திட்டங்களில் முதலிடுவதற்கு அதானி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கும் போது இந்த துறைகளில் சாத்தியமான திட்டங்கள் குறித்து அதானி விவாதிப்பார் என்றும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.