நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சுகாதார வழிகாட்டி நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டியின் படி, நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமலும், திறந்தவெளியில் 150 பேர் கலந்து கொள்ள முடியும் என்பதுடன், மதுபானம் பகிரப்பட அனுமதி வழங்கப்படவில்லை.
உணவகங்களின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 75 பேருக்கு மேற்படாமல் உணவருந்த அனுமதி மற்றும் திறந்த வெளியாயின் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டங்கள் மற்றும் நிழ்வுகளில், மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 150 பேருக்கு மிகையாகாமல் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.