மீன்பிடி படகுகளுக்கான அனுமதி தொடர்பாக பொரிஸ் ஜோன்சனுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, குறித்த விடயம் தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடி இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அணுகல் மீதான அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்குவது பிரான்ஸின் பொறுப்பாகும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இன்று சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பிரச்சினை அல்ல என்றும் இது ஐரோப்பிய ஒன்றிய பிரச்சினை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய கடற்பரப்பில் பிரான்ஸின் மீன்பிடி படகுகள் இயங்குவதற்கு அதிக அனுமதி பத்திரங்களை வழங்கப்படுவதற்கான காலக்கெடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை உள்ளது.
அவ்வாறு உரிமை வழங்கப்படாவிட்டால் சில துறைமுகங்களில் இருந்து இங்கிலாந்து மீன்பிடி படகுகள் தடைசெய்யப்படும் என பிரான்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.