தென்மேற்கு ஆங்கிலேய நகரமான சாலிஸ்பரியில் உள்ள பிஷர்டன் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் சிறுகாயங்களுக்கு உள்ளன சாரதி உட்பட சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து நிலைமையை கட்டுப்படுத்த சாலிஸ்பரி நிலையம் அருகே தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோராயமாக 100 பேரை வெளியேற்ற உதவியதாக டோர்செட் & வில்ட்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.
சாலிஸ்பரி நிலையத்தை நெருங்கும் போது ஒரு ரயிலின் பின்பக்கப் பெட்டி தடம் புரண்டதால் அந்த பகுதியில் உள்ள அனைத்து சிக்னல்களையும் செயலிழக்கச் செய்ததாக கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.