பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அஸ்ட்ரா செனெகா, பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசி வகைகள் செலுத்தப்பட்டமைக்கான சான்றிதழ் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய அளவிலான பொது சுகாதார நிறுவனத்தால், சுற்றுலா பயணிகளின் பிறந்த திகதி உள்ளிட்ட தரவுகள் உள்ளடக்கப்பட்ட பொருத்தமான தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.