சுமார் 20 மாதங்களுக்கு பிறகு வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இஸ்ரேல் வரவேற்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான தடை, நேற்று (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்பட்டது.
பயணிகள் பயணத்துக்கு முந்தைய ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கடந்த 6 மாதங்களில் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியிருக்க வேண்டும்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்னரும், இஸ்ரேல் வந்தடைந்த பின்னரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் கடந்த மார்ச் மாதமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டிருந்த போதும், டெல்டா வகை மாறுப்பாடு தீவிரமடைய தொடங்கியதால், அந்தத் திட்டம் தாமதமானது.
இதையடுத்து, மக்களுக்கு மூன்றாவது தவணை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்தும் பணியை அரசாங்கம் தீவிரப்படுத்தியது. மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.