தற்போதைய அரசாங்கம் பல்கலைக்கழகத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட நியமனங்கள் அதற்கு சிறந்த உதாரணம் என மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் நியமனத்தை பொதுமக்கள் நிராகரித்துள்ளதாக ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் பிக்குகள் முக்கிய பங்காற்றியமை காரணமாகேவே இந்த நியமங்கள் வழங்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, இவ்வாறான அரசியல் நியமனங்களை தாம் வண்மையாக கனடிப்பதாக தெரிவித்துள்ளது.