ஜனாதிபதி தேர்தலின்போது 69 இலட்சம் மக்கள் தனது முகத்திற்காக வாக்களிக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி சுபீட்சமான கொள்கை திட்டத்தின் ஊடாக மாற்றம் ஏற்பட வேண்டும் என்றே வாக்களித்தனர் என தெரிவித்துள்ளார்.
புரட்சிகரமான மாற்றம் கடினமானதாக அமைந்தாலும் அதுவே நிலையானது என்பதனால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொரோனா காரணமாக 5 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இலங்கை போன்ற ஒரு நாடு அவ்வாறான வருவாயை இழக்கும் போது மோசமாக பாதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை விவசாயிகளின் அபிவிருத்திக்காக பாடுபட்டது தற்போதைய அரசாங்கம் என்றும், முன்னைய அரசாங்கங்கள் அதனைச் செய்யத் தவறியதாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
இராணுவத்தை பயன்படுத்தி விவசாயிகளை கரிம உரங்களைப் பயன்படுத்த வைக்க முடியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இருப்பினுஜம் அவ்வாறு ஒருபோதும் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஆகவே விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை என்றும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் அரசாங்கத்துடன் ஒன்றினைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.