தனியார் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தடுப்பூசி முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் மற்றும் வாரந்தோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக, குடியரசுக் கட்சியின் அதிகாரத்தில் உள்ள டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, தென் கரோலினா மற்றும் உட்டா உள்ளிட்ட 5 மாநிலங்களான தனியார் நிறுவனங்கள் மற்றும் மதக் குழுக்களினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த ஜனவரி மாதம் முதல் நடைமுறையாகவுள்ள இந்த உத்தரவில், அமெரிக்க அரசியலமைப்பு ரீதியான சிக்கல் உள்ளதாகவும் எனவே, இது குறித்து விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அறியப்படுத்தியுள்ளது.