யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷமன் கிரியெல்ல உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தனர்.
அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னரே, அது தொடர்பிலான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே, அதனை விரைவில் சபையில் முன்வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன, விரைவில் அதற்குரிய ஆவணங்களை முன்வைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.