யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 75 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன என மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வரை 7 ஆயிரத்து 584 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 508 பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பழை, கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளிலேயே இந்த தரவுகள் கிடைத்துள்ளன.
சீரற்ற காலநிலையால் 75 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுவரை 8 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 139 குடும்பங்களை சேர்ந்த 463 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.