ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 460 குழந்தைகள் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குறித்த நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து தெரிவித்துள்ள யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற பிரச்சினைளாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யுனிசெப் கவலை வெளியிட்டுள்ளது.