பாகிஸ்தானில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றோல் விலையை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசாங்கம் எதிர்காலத்தில் பெற்றோலியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் பெற்றோலிய மேம்பாட்டு வரியை அதிகரிக்குமாறு கோரியுள்ளதோடு, பெற்றோலியப் பொருட்களின் உலகளாவிய விலையைப் பொறுத்தே அது அமையும்’ என பாகிஸ்தானின் நிதி ஆலோசகர் ஷெளகத் தரின் கூறியதாக நியூஸ் இன்டர்நேஷனல் தகவல் வெளியிட்டுள்ளது.
எண்ணெய் பொருட்கள் மீதான சாத்தியமான வரி அதிகரிப்புப் பற்றி அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை குறைந்தால், ‘அரசாங்கம்’ அதிகரிப்பது வரியை அதிகரிப்பது எளிது எனவும் அவர் கூறினார்.
பெற்றோலியப் பொருட்களின் விலைகள் சமீபகாலமாக உயர்ந்து வருவதைப் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் இந்த பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டிருப்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும், சர்வதேசர நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டைகள் உள்ளதை நிராகரித்த அவர் ஸ்டேட் பாங்க் ஒஃப் பாகிஸ்தானின் தன்னாட்சி அதிகாரம் குறித்து சில நெருக்கடிகளைத் தருவதாகவும் வரும் நாட்களில் அந்நெருக்கடிகள் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.