சீன அறிவாற்றல் போரை எதிர்ப்பதற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களைப் பயன்படுத்த தவறான தகவல்களை பரப்பி சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கும் தாய்வான் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தாய்வானுக்கு, எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவாற்றல் போர் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதாக இவ்விதமாக நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சு கூறியதாக தைபே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சக்திகளின் அறிவாற்றல் போர் முயற்சிகளை வரையறுப்பதற்கும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான இராணுவத்தின் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுவதற்கும் சட்டமியற்றுவதற்கான வழிகாட்டுதல்களை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சு கூறியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி போலி சமூக ஊடக கணக்குகள் தாய்வானின் சில ஒத்துழைப்பாளர்களின் மூலம் முன்னெடுக்கும் பிரசாரத்தின் ஊடாக தாய்வானுடன் அறிவாற்றல் போரில் ஈடுபட்டுள்ளது என தைபே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தாய்வானில் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட தவறான தகவல்களை இராணுவம் கண்டறிந்து, அதன் சொந்த சமூக ஊடக கணக்குகள் மற்றும் வலைத்தளங்களில் திருத்தப்பட்ட தகவல்களை இடுகையிடுகிறது, மேலும் முடிந்தவரை பொது இடுகைகளுக்கான பதில்களில் திருத்தப்பட்ட தகவல்களை இடுகையிடுவதாக அமைச்சு கூறியுள்ளது.
இதற்கிடையில், சீன படையெடுப்பு முயற்சியின் அச்சுறுத்தலைச் சந்திக்க இராணுவம் அதன் சமச்சீரற்ற போர் மற்றும் மின்னணு போர் திறன்களை மேம்படுத்துவதைத் தொடர வேண்டும் என ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.