நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலையை எதிர்கொள்வதற்கு எதிரணியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.