‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே இவ்வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.















