பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராமச்சந்திரன், மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 185 நிவாரண முகாம்களில் 10 ஆயிரத்து 73 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பலத்த மழைக்கு 14 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளதுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவர்களது குடும்பங்களுக்கு தாலா 4 லட்சமானது பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.