செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் மொத்தமாக 12இலட்சத்து ஆயிரத்து 80பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 34ஆவது நாடாக விளங்கும் செர்பியாவில் இதுவரை பத்தாயிரத்து 655பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 998பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 811பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 281பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 10இலட்சத்து 87ஆயிரத்து 614பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.