மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமை போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இறந்தவர்களை நினைவுகூரும் நாட்களாக 20 ஆம் திகதியை பொதுமைப்படுத்தி வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் எடுத்த முடிவு ஆரோக்கியானதல்ல என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான நாட்களை அரசியலில் இருந்து மறைக்கவோ திசைதிருப்ப முடியாது என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு அனைத்து அலையங்களிலும் மணி ஒலிப்பி வரலாற்றை கடத்துவதே வரவேற்கத்தக்க விடயம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஆகவே வடக்கு கிழக்கு ஆயர் மன்றம் தமது முடிவை பரிசீலனை செய்து அறிவித்தலை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.