தென் அமெரிக்க நாடான ஏக்வடோர் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கலவரம் தொடங்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தமது சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி, மோதலினால் இலாபம் ஈட்டும் மாபியாக்களை எதிர்த்துப் போராட புதிய நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளார்.
சிறைச்சாலைகள் மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காலூன்றியுள்ள ஏக்வடோர் பகுதிகளையும் மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.