ஆபத்தான பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்று கிளாஸ்கோவில் இடம்பெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்காக வெளிப்படையாகத் திட்டமிடப்பட்டுள்ள முதலாவது பருவநிலை ஒப்பந்தம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக காபன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட குறித்த ஒப்பந்தம் காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப உதவிகளை வழங்க வளரும் நாடுகளுக்கு அதிக பணத்தை உறுதியளிக்கிறது.
அதேநேரம் பருவநிலை மாற்றத்திற்கான முடிவுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றும் அந்த இலக்கை நோக்கி அயராது தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வெப்பநிலை 1.5 செல்ஸியசிற்கு மேல் உயர்ந்தால், மில்லியன் கணக்கான மக்கள் தீவிர வெப்பத்தால் பாதிக்கப்படுவது போன்ற கடுமையான விளைவுகளை பூமி அனுபவிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.