எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இதற்கு தடை கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதலை முன்வைத்து இந்த தடை உத்தரவுக்கான கோரிக்கை முன் வைக்கப்படவுள்ளது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.