எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஏராளமான ஆர்மீனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் ஆர்மீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த மோதலில் தமது படையச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த மோதலிற்கு அஜர்பைஜான் படையினரே காரணம் என குற்றம் சாட்டியுள்ள ஆர்மீனியா, 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கரபாக் பிரதேசத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரில் 6,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குறித்த பிராந்தியத்தில் துருக்கியின் ஆதரவுடன் அஜர்பைஜான் படைகள், அந்நாட்டின் ரு பகுதியாக கருதப்படும் குறித்த இடத்தில் பெரும் பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் அஜர்பைஜானுக்கு எதிராக தனது பிராந்திய இறையாண்மையைப் பாதுகாக்க உதவுமாறு, முக்கிய பாதுகாப்பு நட்பு நாடான ரஷ்யாவிடம் ஆர்மீனியா கேட்டுக் கொண்டது.
இதனை அடுத்து ரஷ்யாவின் தலையீட்டுக்கு பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.