இலங்கையில் இதுவரையில், ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்து 957 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், ஒரு கோடியே 58 இலட்சத்து 83 ஆயிரத்து 630 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 485 பேருக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டடுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.