கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பகுதியே இவ்வாறு இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்குப் பின்னர் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதியை மூடுவதற்கு கடந்த வாரம் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















